இராமராச பூடண கவி
irāmarāca pūṭaṇa kavi
கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில் இணைந்திருந்த ஆந்திரப் பகுதியில் வாழ்ந்த தெலுங்கு மொழிக் கவிஞராவார்.
கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில் இணைந்திருந்த ஆந்திரப் பகுதியில் வாழ்ந்த தெலுங்கு மொழிக் கவிஞராவார். இவரது இயற்பெயர் பட்டு மூர்த்தி, இவர் பெனுகொண்டாப் பகுதியினை, கி.பி. 1570-இல் ஆண்ட முதலாம் திருமலைதேவராயரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். அதனால், இவருடைய இயற்பெயர் மறந்து இராமராச பூடண கவி என்னும் சிறப்புப் பெயரே வழக்கில் நிலை பெறலாயிற்று. இவர் தெலுங்கு மொழிக் கவிதை உலகில் சிறப்பான இடத்தைப் பெற்றுப் பல்லாண்டுகள் ஒளிவீசித் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் இவர் இயற்புலமையோடு இசைப்புலமையும் மிக்கவராய், இனிய தெலுங்கு இசைப்பாடல் இயற்றும் ஆற்றல் உடையவராய் விளங்கினார். இவர் இயற்றியதாகக் கூறப்படும் இசைப் பாடல்கள் இப்பொழுது கிடைக்கவில்லை. இவர் இயற்றிய நரச பூபாலியம் என்னும் நூல் மிக்க சிறப்பு வாய்ந்தது. இந்நூல் வித்யாநாதரால் எழுதப்பெற்றுத் தொரகந்தி நரசராவிற்கு உரிமையாக்கப் பெற்ற ‘பிரதாப ருத்திரீய’ என்னும் நூலின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவர் இயற்றிய அரிச்சந்திர நளோபாக்கியானம் என்னும் செய்யுள் நூல் முழுதும் சிலேடை நயமிக்கதாகும். எல்லாச் செய்யுள்களும் அரிச்சந்திரனுக்கும் நளனுக்கும் பொருத்தமுறச் சொற்களை அமைத்துச் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளன. வசு சரித்திரம் என்னும் இவரது நூல் மிக்க கலைத்திறமையோடு உருவாக்கப்பட்டதாகும். இந்நூல் எளிய கதையினை அரிய கலை நயங்கள் அமைய விரிவாக, வருணனைச் சிறப்போடு கூறுவதாகும். கோலாகல மலைக்கும் சூக்திமதி என்னும் ஆற்றிற்கும் பிறந்த கிரிகா என்னும் இளவரசிக்கும், வசு என்னும் இளவரசனுக்கும் நிகழும் திருமணம் இக்காப்பியத்தின் கருவாகும். திறனாய்வாளர்கள் இந்நூலிலமைந்துள்ள செய்யுள்களின் சிறந்த இசை நலத்தையும், விரிவாக அமைந்துள்ள கற்பனை வளத்தையும் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். இந்நூல் முதலாம் திருமலை காலத்தில் எழுதப்பட்டு, அவருக்கு உரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் பின்னர் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 128)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srn9vmnh/
தமிழ்“இராமராச பூடண கவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/srn9vmnh/APA
Oliyon Research. (2026). இராமராச பூடண கவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/srn9vmnh/MLA
"இராமராச பூடண கவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/srn9vmnh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment