ஆன்மக்கொள்கைகள்

āṉmakkoḷkaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை ஒன்பதும் பின் வருமாறு. 1.மனமே ஆன்மா. இக்கொள்கை உடையவர் அந்தக்கரண ஆன்மவாதி. 2.ஆன்மா ஒன்றே. இக்கொள்கை உடையவர் ஏகான்மவாதி. 3.இந்திரியமே (பொறி) ஆன்மா. இக்கொள்கை உடையவர் இந்திரியான்மாவாதி. 4.ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு. இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி. 5.சூனியமே (இன்மை) ஆன்மா. இக்கொள்கை உடையவர் சூனிய ஆன்மவாதி. 6.உயிர்வளியே ஆன்மா. இக்கொள்கை உடையவர் பிராணான்மாவாதி. 7.விஞ்ஞானமே ஆன்மா. இக்கொள்கை யோகசாரன் கொள்கை ஆகும். 8.ஆன்மா சடப் பொருள். இக்கொள்கை வைசேடிகர் கொள்கை. 9.ஆன்மா ஆனந்தமடைவதே முத்தி. இக்கொள்கை உடையவர் ஆனந்த ஆன்மவாதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 52)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sra5jqq3/

தமிழ்
“ஆன்மக்கொள்கைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sra5jqq3/
APA
Oliyon Research. (2026). ஆன்மக்கொள்கைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sra5jqq3/
MLA
"ஆன்மக்கொள்கைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sra5jqq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment