இலார்டி
ilārṭi
இக்காலத் தொல்லுயிரியலுக்கு வித்திட்டவர்.
இக்காலத் தொல்லுயிரியலுக்கு வித்திட்டவர். தொல்லுயிரியலில் சிறந்து விளங்கிய இவர் பழங்கற்காலத்தை ஆய்வு செய்வதிலும் பேரார்வம் கொண்டவர். இலார்டி (Lartet, Edouart) பிரான்சில் செர்சுப் (Gers) பகுதியிலுள்ள கைரால்டு (Guirauld) என்னும் இடத்தில் கி.பி. 1801–ஆம் ஆண்டு பிறந்தார். சட்டக்கல்வி பயின்ற இவர் புதைபடிவ ஆய்வில் முதன்முதலில் ஆர்வம் கொண்டு, சான்சன் (Sanson) சீமோர்ப் பகுதிகளில் புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறுகளின் (Miocene) புதைபடிவப் படுகைகளில் பல்வேறு உயிரினவகைகள் உள்ளதாகக் கூறினார். அவற்றில் மனிதக் குரங்கு, பிலிபிதிகாசு ஆண்டிகாசு (Pipithecus Antiquus) போன்ற விலங்குகளின் புதைபடிவங்களும் இருப்பதாகக் கண்டறிந்தார். தென்பிரான்சில் பெரிகோர்டு (Perigord) பகுதியிலுள்ள தார்தோகன் (Dordogne) செரிரி (Zerere) பள்ளத்தாக்குகளில் உள்ள குகைகளில், என்றி கிறிசுடி (Henry Christy) என்பவர் துணையுடன் குகை அகழாய்வுகளை மேற்கொண்டார். இவர் சேகரித்த பல்வேறு பழஞ்சின்னங்களைத் தூய செர்மெயின் (Saint Germain) அருங்காட்சியகத்திற்கு அளித்தார். தொல்லுயிரியலின் பேராசிரியராகச் சார்டண்டிசு பிளேண்டிசு (Jardin des plantes) அருங்காட்சியகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட இவர், கி.பி. 1871–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 28 ஆம் நாள் இறந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 376)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snqauuyq/
தமிழ்“இலார்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/snqauuyq/APA
Oliyon Research. (2026). இலார்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/snqauuyq/MLA
"இலார்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/snqauuyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment