அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
arikēcari parākkirama pāṇṭiyaṉ
தென்பாண்டி நாட்டில் அரசாண்ட பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவர்.
தென்பாண்டி நாட்டில் அரசாண்ட பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவர். இவர், தென்காசியில் உள்ள இறைவனுக்குக் கோயில் எழுப்பி அங்கு நாள் வழிபாடு நன்கு நடைபெறும் பொருட்டு இறையிலியாகப் பல ஊர்களை வழங்கினார். இக்கோயிலின் நித்திய, நியம பூசைகள் தவறாது நன்கு நடைபெறுவதற்காகச் சிவனடியார்களையும் வழித்தோன்றல்களையும் வேண்டி ஆறு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்கள் இயற்றியுள்ளார். இப்பாடல்கள் தென்காசிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்க இவர் இறையன்பிலும் அறப்பணிகளிலும் ஆர்வம் மிகக் கொண்டவர். இவர்தம் பாடல்கள் எண்ணிக்கையில் குறைந்தனவாயினும் இனிமையும், உறுதியும் ஏற்றமும் கொண்டவை.நா.ஜெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 774)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sn2m3nyv/
தமிழ்“அரிகேசரி பராக்கிரம பாண்டியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sn2m3nyv/APA
Oliyon Research. (2026). அரிகேசரி பராக்கிரம பாண்டியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sn2m3nyv/MLA
"அரிகேசரி பராக்கிரம பாண்டியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sn2m3nyv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment