இலே
ilē
சம்மு–காசுமீர மாநிலத்திலுள்ள இலடாக்கு மாவட்டத்தின் செயற்பாட்டுத் தலைநகரமாகும்.
சம்மு–காசுமீர மாநிலத்திலுள்ள இலடாக்கு மாவட்டத்தின் செயற்பாட்டுத் தலைநகரமாகும். இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இலடாக்கு (Ladakh) மாவட்டமும் மாவட்டத்தின் மையத்தில் இலேயும் (Leh) அமைந்துள்ளன. சம்மு–காசுமீர மாநிலம் இந்தியாவின் வடகோடி மாநிலமாகும். முற்காலத்தில் இலே நகரம் ஒட்டகப் பயணிகள் கூடுமிடமாக இருந்தது. ஆசியாக் கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒட்டகப் பயணிகள் இலே நகரத்திற்கு ஒப்பந்தச் சாலை (Treaty Road) வழியாகவே வந்து சென்றனர். இச்சாலை மேற்கில் சிரீநகரையும் (Srinagar), தென்கிழக்கில் திபெத்தைச் சார்ந்த தெம்சாக் (Demchok)கையும் இணைக்கிறது. உலகக் கூரை எனப்படும் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இலே நகரம், 3520 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரைச் சுற்றிலும் மிக்க உயரம் கொண்ட மலைகள் பல சூழ்ந்துள்ளன. உலகிலேயே இத்துணை உயரத்தில் நிலையான குடிமக்களைக் கொண்டு விளங்கும் நகரங்களுள் இலேயே முதன்மையானது. இது ஒரு வணிக மையம். பழ உற்பத்தியும் வேளாண்மையுமே இந்நகரின் சிறப்பான பொருளாதாரம்.
இலடாக்கு அரசர்களின் அரண்மனை ஒன்றும் சங்கர மடமும் இந்நகரத்தை எதிர்நோக்கியுள்ளன. இலேயின் மக்கள் தொகை 5506 (1971).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 452)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smamrb5y/
தமிழ்“இலே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/smamrb5y/APA
Oliyon Research. (2026). இலே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/smamrb5y/MLA
"இலே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/smamrb5y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment