அரிசில் கிழார்
aricil kiḻār
அரிசில் கிழார் கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர்.
அரிசில் கிழார் கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிட வடபாலுள்ள அரியலூர் என்பதன் மரூஉவாக இருக்கலாம். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடி (பதிற்றுப்பத்து-எட்டாம்பத்து) ஒன்பது லட்சம் பொற்காசும் அரசாட்சியும் பரிசிலாகப் பெற்றார். எனினும் அவன் கொடுத்த அரியணையை அவனுக்கே கொடுத்து அமைச்சுரிமை பெற்றார்; வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தல்வேண்டி அவனைப் பாடினார். அதிகமான் தகடூர் எறிந்து வீழ்ந்த எழினியின் பிரிவாற்றாது புலம்பினர். இவர் செய்தனவாக இப்பொழுது பதினெட்டுச் செய்யுட்கள் இருக்கின்றன. (பதிற்றுப்பத்து எட்டாம்பத்து ; புறம். 146, 230, 281, 285, 300, 304; குறுந்தொகை 193).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 235)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjcv3n2f/
தமிழ்“அரிசில் கிழார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjcv3n2f/APA
Oliyon Research. (2026). அரிசில் கிழார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjcv3n2f/MLA
"அரிசில் கிழார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjcv3n2f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment