அரிகோரப் போர்
arikōrap pōr
ஆங்கிலேயருக்கும் மைசூர் மன்னன் திப்புவிற்கும் இடையே நடைபெற்றது.
ஆங்கிலேயருக்கும் மைசூர் மன்னன் திப்புவிற்கும் இடையே நடைபெற்றது. இவர்களுக்கிடையே மூன்று போர்கள் நடைபெற்றன. (ஆங்கில–மைசூர்ப் போர்கள்) கி.பி. 1790–ஆம் ஆண்டு செப்டம்பர் 13–ஆம் நாள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலப் படைத்தலைவர் திப்புவிடம் தோற்றதுடன் தலைதெறிக்க ஓடிக் கோயம்புத்தூரில் தஞ்சம் புகுந்தார். நிசாமுடனும் மராட்டியருடனும் முன்பே நட்புடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்.
எப்படியும் மைசூரை வென்றாக வேண்டுமென்பதே இந்திய ஆட்சித் தலைவர் காரன்வாலீசின் (Cornwallis) திட்டம். எனவே, அவரே சென்னை வந்து படைத்தலைமை ஏற்றுக் கொண்டார். இவரது ஆணைப்படி மெடோசு (Medows) சென்னையிலிருந்து தென்புறமும், ஆபர்குரோம்பி மேல்திசையில் மலபாரின் மறுபுறமும் தாக்கினர். வடக்குப் பகுதியில் நிசாமும் மராத்தியரும் தாக்குதல் நிகழ்த்த ஆணையிடப்பட்டனர். காரன்வாலீசு கீழ்த்திசைத் தாக்குதலுக்குத் தலைமையேற்றார். வேலூர் வந்து பெரும்படை திரட்டி, ஆம்பூர்க் கணவாய் வழியே மைசூரினுள் புகுந்தார். இருபடைகளும் அரிகோரம் என்னுமிடத்தில் கி.பி. 1791-இல் சந்தித்தன. கடுமையான போர் நடந்தது. திப்பு நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டார். வீரத்துடன் போர் புரிந்த போதிலும் தோல்வி கண்டார். சீரங்கப்பட்டணமும் வீழும் நிலையில் திப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள இசைந்தார்.
திப்பு தம் அரசில் பாதியை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதும், போர்க்கடன் கட்டி முடிக்கும் வரையில் அவர்தம் இரு புதல்வர்களும் ஆங்கிலேயரிடம் (பணையமாக) வளரவேண்டும் என்பதும் கூறப்பட்டன.
இவ்வெற்றியின் விளைவாக ஆங்கிலேயர் செல்வாக்கு மேலும் விரிவடைந்தது. மலபார் ஆட்சியும், குடகு அரசின் மீது மேலுரிமையும் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன. இப்போரினால் திப்பு சுல்தானுக்குப் பெரும்பொருள் இழப்பு ஏற்பட்டது. அடிமைத் தளையை அகற்ற முழுமூச்சுடன் போரிட்ட மாவீரன் திப்பு அண்டை அரசுகளின் ஆதரவின்மையால் தோல்வியுற நேரிட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 775)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/seqzrztp/
தமிழ்“அரிகோரப் போர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/seqzrztp/APA
Oliyon Research. (2026). அரிகோரப் போர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/seqzrztp/MLA
"அரிகோரப் போர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/seqzrztp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment