மேகக்கிரந்தி நோய்ச் சோதனை

mēkakkiranti nōyc cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவர் கிரந்தி என்னும் மேகப்புண் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு வகை இரத்தச் சோதனை. ஒவ்வொருவரின் குருதியிலும் எதிர்ப்புப் பொருளுக்கு உதவி செய்யக்கூடிய "இணைப்பான்' என்னும் பொருள் அடங்கியுள்ளது. ஒரு நச்சுப் பொருள், அதாவது, 'ஆ' என்ற வேறொரு பிராணியின் இரத்தம், 'அ' என்ற பிராணியின் இரத்தத்தில் செலுத்தப்படும் போது, அந்த நச்சுப் பொருள் ('ஆ' இரத்தம்), தாக்குவதற்கு முன்பு இந்த இணைப்பானுடன் கலக்க வேண்டும். இணைப்பானுடன் நச்சுப் பொருள் கலந்திருந்தால், நச்சு 'அ' வின் இரத்தத்தில் கலந்துவிட்டது என்று பொருள். 'அ' வின் குருதியை மேகக்கிர்ந்தி பீடித்திருக்குமானால், 'ஆ' நச்சு கலப் பதற்கு முன்பு 'அ' இரத்தம் இணைப்பானுடன் இணைந்து விடும். அப்போது, 'ஆ' நச்சு கலப்பதற்கு இணைப்பான் எதுவும் எஞ்சியிருக்காது. அதனால் 'ஆ' நச்சு 'அ' குருதியைத் தாக்க இயலாது. 'அ' குருதியின் உயிரணுக்கள் சேதமடையாமல் இருக்கும். இதனை இச்சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் — wassermann reaction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 668)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rzzxsgqb/

தமிழ்
“மேகக்கிரந்தி நோய்ச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rzzxsgqb/
APA
Oliyon Research. (2026). மேகக்கிரந்தி நோய்ச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rzzxsgqb/
MLA
"மேகக்கிரந்தி நோய்ச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rzzxsgqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment