அனந்தப்பூர்
aṉantappūr
சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம்.
சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசருடைய திவானாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத்துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். நன்செய் சூழ்ந்தது. மக்: 31,952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரியிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் வட, மத்தியப் பகுதிகள் பல குன்றுகள் நிறைந்த பீடபூமி, தென் பகுதி மலைப் பாங்கானது. குத்தியிலும் பெனுகொண்டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறைகள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6,706 ச.மைல் ; மக் : 13,61,556 (1951).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 318)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rx829x7x/
தமிழ்“அனந்தப்பூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rx829x7x/APA
Oliyon Research. (2026). அனந்தப்பூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rx829x7x/MLA
"அனந்தப்பூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rx829x7x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment