நெய்ம்மீன்
neymmīṉ
நெய்ம்மீன் (சித்திரை)
நெய்ம்மீன் (சித்திரை)
கோடைக் கால விண் மீன் குழுவான கன்னி (Virgo) ராசியில் அமைந்துள்ள α–வர்ஜினிஸ் (α–Virginis) என்னும் விண் மீன், நெய்ம்மீன் அல்லது சித்திரை (spica) எனப் படுகிறது. இது வானத்தில் தோன்றும் ஒளி மிக்க விண் மீன்களில், பதினைந்தாம் விண் மீனாகும். இது கன்னி ராசியில் உள்ள விண் மீன்களில், மிகவும் அதிக ஒளியுடைய விண் மீன். இவ்விண் மீன் ஓர் இரும விண் மீன் (binary star) ஆகும். இவ்விண் மீனின் பொலிவு பரிமாணம் (magnitude) தோராயமாக 0.98 ஆகும். வெண்மை கலந்த நீல நிறமுடைய இது B₁ நிற மாலை வகையைச் (Spectral type) சார்ந்ததாகும். புவியிலிருந்து ஏறத் தாழ 270 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது; சூரியனைப் போல் ஏறத் தாழ 2440 மடங்கு ஒளியுடையது. இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 20,000K ஆகும். —பெ. வடிவேல்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 182)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rvbgjzwd/
தமிழ்“நெய்ம்மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rvbgjzwd/APA
Oliyon Research. (2026). நெய்ம்மீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rvbgjzwd/MLA
"நெய்ம்மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rvbgjzwd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment