{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rvbgjzwd/", "data": {"id": "rvbgjzwd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rvbgjzwd/", "kind": "article", "headword": "நெய்ம்மீன்", "romanization": "neymmīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.116223+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நெய்ம்மீன் (சித்திரை)", "body_ta": "நெய்ம்மீன் (சித்திரை)\n\nகோடைக் கால விண் மீன் குழுவான கன்னி (Virgo) ராசியில் அமைந்துள்ள α–வர்ஜினிஸ் (α–Virginis) என்னும் விண் மீன், நெய்ம்மீன் அல்லது சித்திரை (spica) எனப் படுகிறது. இது வானத்தில் தோன்றும் ஒளி மிக்க விண் மீன்களில், பதினைந்தாம் விண் மீனாகும். இது கன்னி ராசியில் உள்ள விண் மீன்களில், மிகவும் அதிக ஒளியுடைய விண் மீன். இவ்விண் மீன் ஓர் இரும விண் மீன் (binary star) ஆகும். இவ்விண் மீனின் பொலிவு பரிமாணம் (magnitude) தோராயமாக 0.98 ஆகும். வெண்மை கலந்த நீல நிறமுடைய இது B₁ நிற மாலை வகையைச் (Spectral type) சார்ந்ததாகும். புவியிலிருந்து ஏறத் தாழ 270 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது; சூரியனைப் போல் ஏறத் தாழ 2440 மடங்கு ஒளியுடையது. இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 20,000K ஆகும். —பெ. வடிவேல்"}}