சூல் காலக் கவனிப்பு
cūl kālak kavaṉippu
பேறு காலத்தின் போது, உடல் நலத்தைப் பேணிக் காத்தல், இயல் நிலையிலிருந்து ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பிடித்தல், பாதுகாப்பான மகப்பேற்றிற்கு ஆயத்தம் செய்தல், மகப் பேற்றிற்குப் பின் சீரடைந்து, தாய்ப் பாலூட்டுவதைப் பேணல், உயிர்ப்புள்ள நல வாழ்வான, முதிர்ச்சியடைந்த குழந்தை பேணல் ஆகியன அடங்கும்.
பேறு காலத்தின் போது, உடல் நலத்தைப் பேணிக் காத்தல், இயல் நிலையிலிருந்து ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பிடித்தல், பாதுகாப்பான மகப்பேற்றிற்கு ஆயத்தம் செய்தல், மகப் பேற்றிற்குப் பின் சீரடைந்து, தாய்ப் பாலூட்டுவதைப் பேணல், உயிர்ப்புள்ள நல வாழ்வான, முதிர்ச்சியடைந்த குழந்தை பேணல் ஆகியன அடங்கும்.
மகப் பேற்றிற்குக் குடும்ப மருத்துவர், மகப் பேறு மருத்துவர், செவிலியர் ஆகியோரின் முழுக் கவனம் தேவை. முந்தைய பேறு கால வரலாறு, இடையே தோன்றிய நோய்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சூலுடைய பெண்ணின் முழு வரலாறும் தெரிந்திருக்க வேண்டும்.
இறுதி மாத விடாயின் முதல் நாள் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், வரப் போகும் பேறு காலத்தை அறுதியிட முடியும். முன்னோக்கி 9 மாதங்களையும், ஏழு நாளையும் கூட்டி அறுதியிடலாம் அல்லது பின்னோக்கி மூன்று மாதங்கள் கழித்து 7 நாள் கூட்டியும் கணிக்கலாம். காட்டாக, இறுதி மாத விடாயின் முதல் நாள் ஜனவரி 10 என்றால், எதிர் பார்க்கும் பேறு கால நாள் அக்டோபர் மாதம் 17 ஆம் நாளாகும். இந்த நாள் தாயின் முந்தைய மாத விடாய் எத்தனை நாள் நீடிக்கும் என்பதைப் பொறுத்தும் இருக்கும்.
சூல் காலக் கவனிப்பில், குழந்தையின் கருப்பையுள் அசைவுகள் (இது 18–20 வாரங்களிலேயே தெரியும்). மார்பக மாற்றங்கள், மசக்கை, சிறு நீர் அடிக்கடி பிரிதல், சில போது குமட்டல், வாந்தி போன்றவை கவனிக்கப் பட வேண்டும். தேவையேற்பட்டால், மருத்துவம் அளிக்க வேண்டும். யோனி வழியாகக் குருதி வெளிப்பட்டால், கூடுதல் கவனிப்பு வேண்டும்.
முந்தைய சூல்களின் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்க்கு 7, 8, 9 ஆம் மாதங்களில், இசிவு நோய்க்கான தடுப்பு ஊசி தர வேண்டும். முன்னர் பிறந்த குழந்தைகளின் எடையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறுவை முறைகள் (சாமண இடுக்கி, கருப்பைத் திறப்பு போன்றவை) நிகழ்ந்திருந்தால், தெரிந்து கொள்ள வேண்டும். தாயின் உயரம், எடை, சிறுநீர் ஆய்வு, குருதி அழுத்தம் ஆகியவை கணக்கிடப்பட வேண்டும். குருதி ஆய்வு செய்து சோகை நோய் உள்ளதா என்பதையும், Rh குருதி வகையையும் அறிய வேண்டும். குழந்தையின் கருப்பைக் கிடப்பைச் சோதிக்க வேண்டும். குருதி ஆய்வின் போது, தந்தை Rh+ ஆக இருந்து, தாய் Rh– ஆக இருந்தால், குழந்தை சாதாரணமாக Rh+ ஆக இருக்கும். சில போது, Rh–ஆகவும் இருக்கலாம். குழந்தை Rh– ஆக இருந்தால் மகப் பேற்றின்போது, தாய்க்கும், சேய்க்கும் சிக்கல்கள் உண்டாகலாம். மருத்துவ ஆய்வின் போது, கருப் பையில் குழந்தை குறுக்காக அல்லது தலை கீழாக உள்ளதா என்பதையும், புட்டம் கீழாகத் தோன்றுகிறதா என்பதையும் அறுதியிட முடியும். தாயை ஆய்வு செய்யும் போது, கூர்ந்து நோக்கல், தொட்டுப் பார்த்தல், தட்டிப் பார்த்தல், ஸ்டெத் முறை ஆகியவை கையாளப் படும், கருப்பையின் உயரமும், கபால-கூபக விட்ட அளவு, குழந்தையின் தலை விட்டம் ஆகியனவும் கணக்கிடப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மருத்துவர் செயல்படுவார். —அ. கதிரேசன் நூலோதி. Vera Bodyazhina, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 659)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtpd3mhc/
தமிழ்“சூல் காலக் கவனிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtpd3mhc/APA
Oliyon Research. (2026). சூல் காலக் கவனிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtpd3mhc/MLA
"சூல் காலக் கவனிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rtpd3mhc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment