நெடுஞ்சாலை, இருப்புப் பாதை செல்வதற்கான மண் மேடு (railway embankment) முதலியவற்றிற்குக் கீழே நீர் செல்லும் வடிகால் அமைப்புக் கட்டுமானம் சிறு பாலம் அல்லது மதகு (culvert) எனப்படும். இவ்வடிகால் அமைப்பின் வெட்டுமுகம் செவ்வகம், வட்டம், அரை வட்டம் முதலிய வடிவங்களில் காணப்படும். 1.1 ச. மீட்டருக்கும் அதிகமான பரப்புடைய திறப்புகளில், செவ்வக வடிவில் இக்கட்டுமானம் அமைக்கப்படுகிறது. இது வலிவூட்டப்பட்ட கற்காரையால் கட்டப்படுகிறது. வட்ட வடிவ மதகு 0.3—3 மீ. விட்டமுடைய திறப்புகளில் பயன்படுகிறது. சிறிய வட்ட வடிவ மதகு கற்காரை, நெளிவுள்ள உலோகம் (corrugated metal), பளிங்கால் ஆன களிமண் (vitrified clay) முதலியவற்றால் கட்டப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பெரிய வட்ட வடிவ மதகு நெளிவுள்ள உலோகம், வலிவூட்டப்பட்ட கற்காரை முதலியவற்றால் கட்டப்படுகிறது. 6.1 மீ. அகலமுள்ள திறப்பு அரை வட்ட வடிவ அல்லது வளைவு மதகாக, நெளிவுள்ள உலோகத்தால் கட்டப்படுகிறது. தற்போது பெரிதும் செங்கற்களால் கட்டப்படுகிறது. இவ்வகை மதகுகள் பெரிய அளவில் இருந்தால், உலோகத்தால் முன்னரே வடிவமைக்கப்பட்ட வெட்டுமுகங்கள் (precast metal section) வளைவாகப் பயன்படுகின்றன. இதன் அடி மட்டம் கற்காரையால் தாங்கப்படுகிறது. கண் இடைவெளி (span) 8 மீட்டருக்குள் இருப்பின் அப்பாலம் சிறு பாலம் எனப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —இரா. சரசவாணி நூலோதிS. K. Garg, Irrigation Engineering and Hydraulic Structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987.