சோழ வேந்தன் முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் ஆவார். இராசகேசரி கண்டராதித்தன் இறந்த பின்னர்ப் பரகேசரி பட்டத்துடன் அரியணையேறினார். இவர் அரிகுலகேசரி எனவும் அரிந்தமன் எனவும் அழைக்கப்பட்டார். தம் மகளான அரிஞ்சிகைப் பிராட்டியை வாணர்குல மன்னனுக்கு மணமுடித்து வாணரது நட்பினைப் பெற்றார். தம் தந்தையான முதலாம் பராந்தகன் இழந்த திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் மீட்க இராட்டிர கூடருடன் இவர் போரிட்டார். ஆற்றூரில் நடைபெற்ற போரில் இவர் உயிர் துறந்தார்; எனவே ‘ஆற்றூர்த் துஞ்சிய தேவர்’ என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றார். முதலாம் இராசராசப் பெருமன்னன், தன் தந்தை வழிப்பாட்டனான அரிஞ்சயனுக்குப் பள்ளிப் படைக்கோயில் எடுத்தார். அது இன்று ‘சோழேச்சுரம்’ என அழைக்கப்படுகிறது.ம.இரா.