ஆசியச் சங்கம்
āciyac caṅkam
ஆசியச் சங்கம் (The Asiatic Society) 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் வங்காளத்து ராயல் ஆசியச் சங்கம் என்ற பெயரால் நிறுவப்பெற்று, இப்போது ஆசியச் சங்கம் என்னும் பெயரால் கல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
ஆசியச் சங்கம் (The Asiatic Society) 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் வங்காளத்து ராயல் ஆசியச் சங்கம் என்ற பெயரால் நிறுவப்பெற்று, இப்போது ஆசியச் சங்கம் என்னும் பெயரால் கல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இருபத்தொரு வயதான எல்லா நாட்டு மக்களும் உறுப்பினராகலாம். கௌரவ உறுப்பினர்களும் உண்டு. நூல்நிலையங்கள், விஞ்ஞான ஸ்தாபனங்கள் முதலியனவும் இதில் உறுப்பினராகலாம். ஆண்டுதோறும் 'ஆண்டு நூல்' ஒன்றும், 'கால் ஆண்டு இதழ்' ஒன்றும் வெளியிடுகின்றனர். இவை தவிர நூல்களும் வெளியீடுகிறார்கள். இச்சங்கத்தின் நோக்கம் ஆசியா என்னும் பூகோள எல்லைக்குள் மனிதனால் செய்யப்படுவதும் இயற்கையில் உண்டாவதுமான எதையும் ஆராய்வது என்பதாம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 380)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfnnuu82/
தமிழ்“ஆசியச் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfnnuu82/APA
Oliyon Research. (2026). ஆசியச் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfnnuu82/MLA
"ஆசியச் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfnnuu82/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment