யானைக்கால்

yāṉaikkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானையின் கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானைக்கால்)
2.
யானைக்கால் நோய் என்னும் ஒரு நோய். இது ஃபைலேரியா (Filaria) என்னும் நுண்புழுவாலும் அதன் உடலின் உள்ளே உள்ள நுண்ணியிரியாலும் ஏற்படும் நோய். தோலுக்குக் கீழே உள்ள பகுதி மிகவும் தடிப்பாகிவிடும். கொசுக்களால் இவை மாந்தர்களுக்குப் பரவுகின்றது. இது காலைத் தவிர பிற பகுதிகளையும் கூடக் தாக்கும். ஆனால் பெரும்பாலும் கொழுநீர் மண்டலத்தின் (lymphatic system) வழியே காலைத் தாக்குவதால் கால் ஊதிப்பெருத்து யானையின் கால் போல் தோற்றம் தருவதால் யானைக்கால் நோய் எனப் பெயர் பெற்றது. படத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஓர் ஆணின் விரைப்பை (scrotum) ஊதிப் பெருத்து இருப்பதைப் பார்க்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானைக்கால்)
3.
கொழுநீர் தடைப்படுவதால், காலிலும் கையிலும் வீக்கம் ஏற்படுவது. முதன்மையாகக் காலிலேயே இருக்கும் பைலேரியா என்னும் நூற்புழுவால் ஏற்படும் வெப்பமண்டல நோய். பா. anopheles, mosquitoes — elephantiasis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 144)

தொகுதிகள் · Categories: நோய்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ragdwx3e/

தமிழ்
“யானைக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ragdwx3e/
APA
Oliyon Research. (2026). யானைக்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ragdwx3e/
MLA
"யானைக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ragdwx3e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment