செருமானிய கீழ்த் திசை மொழிப் புலமையாளர். இவரது முழுப்பெயர் ஈசின் அல்சேசு (Eugen Hultzsch). இவர் வடமொழிப் புலமை மிக்கவர். கி.பி. 1884 முதல் 1885 வரையிலான ஆண்டுகளில் ஆறுமாதக் காலம் வட இந்தியாவில் பயணம் செய்தார். இவர் தம் பயணத்தின் போது விலைமதிப்பற்ற கையெழுத்து ஏடுகளையும் கல்வெட்டுகளையும் சேகரித்தார். கி.பி. 1887 – இல் சென்னை மாநிலத் தொல்லியல் ஆய்வுத்துறையில் கல்வெட்டாய்வாளராக நியமிக்கப்பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் வடமொழித் தேர்வுக் கண்காணிப்பாளராகவும் இவர் பணியாற்றினார். 1903–இல் கல்வெட்டாய்வாளர் பணியிலிருந்து விலகிய பின்னர், ஆல் (Halle) பல்கலைக் கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் தொகுதியைத் தொடங்கி முதற்பகுதியைப் பதிப்பித்தவர். மேலும், தென்னிந்திய வடமொழிக் தையெழுந்து ஏடுகள் பற்றிய அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். இந்தியக் கல்வெட்டியலைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை “இந்தியத் தொல்லியல்” (Indian Antiquary) என்னும் இதழில் வெளியிட்டிருக்கிறார்.