உலகம்

ulakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலகம்)
2.
உயர்ந்தவர், பூமி, உலகில் உள்ளவர்,ஒழுக்கம்
3.
அந்தரம், சுவர்க்கம், பூலோகம், பரலோகம், அல்லது பாதாள லோகம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
4.
(மேல்) பூலோகம், சுவர்லோகம், அயர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், (கீழ்) அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசாதலம், பாதாலம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
5.
இந்த உலகத்து உயிர்கள், (குறள் 11) - [உலகம் என்றது ஈண்டு உயிர்களை என்றார் பரிமேலழகர். மழையின்மையால் கடல் குன்றுதல் போன்றனவும், நிகழ்கின்றமையான் உலகம் என்பது உலகத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் குறித்தல் கூடும்], (குறள் 11); மண்ணுலகின் கண், (குறள் 19); உயர்ந்தோர், (குறள் 117, 280, 425, 426, 1031); நிலவுலகம், (குறள் 222, 243, 247); புகழ் உலகம், (குறள் 346); உலக நடை, (குறள் 996).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 77)
6.
1. உயிர்த்தொகுதி 2. பொருள் தொகுதி. உலகம் அவையம் பருப்புடையது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 74)
7.
1. பிரபஞ்சம் 2 புவனம். இது 224 பொதுவாகத் தத்துவ வழக்கில் உலகம் நான்காகும். அவை பின்வருமாறு: 1. சொல்லுலகம் (சத்தப்பிரபஞ்சம், இதில் மந்திரம் (11), பதம் (81), வன்னம் (51) என மூன்று அடங்கும். 2.பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) இதில் புவனம் (224), தத்துவம் (36) என இரண்டு அடங்கும். 3.பருப்பொருள் உலகம் (அசேதனப் பிரபஞ்சம்). 4.அறிவுடை உலகம் - (சேதனப் பிரபஞ்சம்) புராண வழக்குப்படி பூலோகம், பரலோகம் (சொர்க்கம்), கீழ்மேல் உலகம் என உலகம் நான்கு வகை. இவ்வகையில் விண் ஏழு, பார் ஏழு ஆகியவையும் அடங்கும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r82ngwhz/

தமிழ்
“உலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r82ngwhz/
APA
Oliyon Research. (2026). உலகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r82ngwhz/
MLA
"உலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r82ngwhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment