மோரியர்களைத் தொடர்ந்து வட இந்தியாவை ஆண்ட சுங்க மரபின் இரண்டாம் அரசர். அவர் தந்தை புசியமித்திர (Pushyamitra) சுங்கன்; சுங்க மரபினைத் தோற்றுவித்தவர். பாரூத் தூபி (Barhut Stupa) அக்கினிமித்திரரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. முடி சூட்டிக்கொண்ட போது, முதிர்ந்த வயதினராய் இருந்தமையால், அவர் எட்டாண்டுகளே ஆட்சி நடத்தினார். காளிதாசரால் எழுதப்பெற்ற ‘மாளவிகாக்னிமித்திரம்’ என்னும் வடமொழி நாடக உறுப்பினர்களுள் அக்கினிமித்திரர் தலைமையானவர்.