மக்லி
makli
பொருள்கள் · Senses
1.
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்றும் மின்னணுவியல் தொடர்பான சோதனை களை மக்லீ துவக்கினார். பள்ளியில் எட்டாண்டு கள் இருந்த காலத்தில் பருவ நிலை ஆய்வுத் திட்டம் ஒன்றில் அவர் பணியாற்றினார். சிக்கலான சுற்றுச் சூழல் தொடர்பான கணக்கு கிளைச் செய்ய விரைவாகச் செயல்படக்கூடிய மின்னணுவியல் கருவி ஒன்று அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். 1941இல் அவர் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள மின் பொறியியல் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 1943ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜே. பிரெஸ் பெர் ஈக்கெர்ட்டைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து இராணுவ ஆயுதப் படைப் பிரிவுக்கு மின்னணுவி யல் கணினி ஒன்றைத் தயாரிப்பதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இராணுவத்தின் ஆயுதப் படைப் பிரிவு அவருக்கு அந்த எந்திரத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இராணுவத்துக்கு இரண்டாவது உலகப் போருக்காக புதிதாக உருவாக்கப்பட்ட பீரங்கிகளின் இலக்கு களை நிர்ணயிப்பதற் கான கணிதப் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பட்டியல்களை மூர் பள்ளி ஏற்கனவே பயன்படுத்தி வந்தது. 1943-க்கும் 1946-க்கும் இடைப்பட்ட காலத்தில் இவை மிகவும் மெதுவாக இயங்கின. ஈக்கெர்ட்டும், மக்லீயும் மின் னணுவியல் எண் ஒருங்கிணைப்பி மற்றும் கணினி ஒன்றை உருவாக்கினார்கள். எதிர்காலத்தில் பல கணினி வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான முன்னோடியாக இது அமைந்தது. ஈனியாக் உண்மையிலேயே ஒரு பெரிய ராட்சதன் ஆகும். அது 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடக் குழாய்களைக் கொண்டது. அதன் எடை 30 டன்கள். அது மூன்று படுக்கையறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் பரப்பளவைக் கொண்ட அறையில் அமைக்கப் பட்டிருந்தது. ஈனியாக் உருவானதைத் தொடர்ந்து ஈக்கெர்ட் டும் மக்கிலீயும் தங்கள் சொந்தக் கம்பெனியை நிறுவினார்கள். அவர்கள் பினாக் என்ற பெயரில் தங்கள் இரும எண் தானியங்கிக் கணினியை அமைத்தார்கள். அது சோதனை முயற்சியாக அமைந்தது. பொது நோக்கங்களுக் கான உலகின் முதலாவது வணிகக் கணினி யுனிவாக், அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப் புக் கழகத்தில் நிறுவப்பட்டது. ஈக்கெர்ட்டும் மக்லீயும் துவக்கிய நிறுவனம் இப்பொழுது ஸ்பெரி கார்ப்பரேஷனின் ஒரு அங்கமாக உள்ளது. இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய கணினி சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது.
— Mauchly, John 1907-1980
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6ph7nfd/
தமிழ்“மக்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6ph7nfd/APA
Oliyon Research. (2026). மக்லி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6ph7nfd/MLA
"மக்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6ph7nfd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment