கரிமச் சேர்மங்களில் α, β நிறைவுறா அமிலங்களைத் தயாரிக்க உதவும் ஒரு முறை நோவினேகல் வினை(Knoevenagel reaction) ஆகும். இவ்வினை கரிமக் காரம் உடனிருக்க, ஆல்டிஹைடுகளும், வீரிய (active) மெத்திலீன் தொகுதிகளும் இணைந்த கரிமச் சேர்மங்களுக்கிடையே நிகழ்கிறது. இவ்வினைப்படி எண்(1)இலிலேயே முடிந்து விடலாம். அல்லது மைக்கேல் குறுக்க வினை வழியாக வினைப்படி எண் (2)க்கும் தொடரலாம். சம அளவு ஆல்டிஹைடு எத்தில் மாலனேட் ஆகியவை பிரிடின் உடனிருக்க, வினைப் படும் போது, வினை எண்(1) நிகழ்கிறது. மிகையளவு எத்தில் மலானேட் செறிந்திருக்கப் பைப்பிரிடின் உடனிருக்கும் போது, ஆல்டிஹைடு அலிஃபாட்டிக் வகையினதாகவும் இருந்தால், வினை(2) தொடர்கிறது. மேலும், நோவினேகல் வினை என்பது சேர்மங்கள் குறுக்கமடைவதையும், இதன் விளைவாக, நிறைவுறாச் சேர்மங்கள் உருவாவதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே, α, β நிறைவுறா அமிலங்கள் தயாரிக்க, வினை எண் (1)ஐப் பயன் படுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து, நீராற் பகுப்பும் வெபப்பமூட்டலும் நிகழ வேண்டும். பொதுவாக இவ்வினை வழி முறையில், ஆல்டிஹைடுடன் மலானிக் அமிலத்துடன், பிரிடின் உடனிருக்கக் கலந்தாலே போதுமானது. எ-டு: அசெட்டால்டிஹைடு குரோட்டோனிக் அமிலம் தரும் வினை. நோவினேகலின் வினை வழி முறை இன்றியமையாதது. பிரிடின் போன்ற மூவினையைக் காரம் வினை வேக மாற்றியாகப் பயன் படும் போது, ஆல்டால் குறுக்க வினை நிகழும் போது ஏற்படும் வழி முறையைப் போன்றே, இவ்வினையிலும் ஏற்படுகிறது. எத்தில் மலானேட், ஆல்டிஹைடுகளுடன் மட்டுமே குறுக்க வினை நிகழ்த்தும். ஆனால், எத்தில் அசெட்டேட் அமினோ புரோப்பியோனிக் அமிலம் போன்ற அமினோ அமில வினை வேக மாற்றி உடனிருக்க, கீட்டோன்களுடன் குறுக்க வினை புரியும். எ-டு: அசெட்டோன் ஐசோ புரோப்பிலிடின் சயனோ அசெட்டிக் எஸ்ட்டரை உண்டாக்குதல். சயனோ சேர்மங்கள் எளிதில் நீராற் பகுப்படைந்து, அவற்றை ஒத்த கரிம அமிலங்களைக் கொடுப்பதால், இவ்வினையை R₂C = CH – COOH எனும் வாய்ப்பாடுடைய α, β நிறைவுறாக் கரிமச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன் படுத்தலாம். —த. தெய்வீகன் துணை நூல். Robert Thronton Morrson and Robert Neilson Boyd, Organic Chemistry, 4th Edtion, Allyn and Bacon, inc, Boston, 1985.