என்பவன் சிரீலங்கா மன்னனான மானவன்மனின் மகன். இவன் கி.பி. 718-இல் மன்னனாக முடிசூட்டிக்கொண்டவன்; பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மரின் அரண்மனையில் சிறிது காலம் வாழ்ந்தவன். எனவே, சிரீலங்காமீது பல்லவரின் செல்வாக்கு வளர்ந்திருந்தது. பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்ட போது, அக்கபோதி பல்லவ மன்னருக்கு உறுதுணையாக இருந்தான். இவன் கி.பி. 724-இல் காலமானான்.