{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "quwq5juk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quwq5juk/", "kind": "article", "headword": "அக்கபோதி", "romanization": "akkapōti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.316917+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பவன் சிரீலங்கா மன்னனான மானவன்மனின் மகன்.", "body_ta": "என்பவன் சிரீலங்கா மன்னனான மானவன்மனின் மகன். இவன் கி.பி. 718-இல் மன்னனாக முடிசூட்டிக்கொண்டவன்; பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மரின் அரண்மனையில் சிறிது காலம் வாழ்ந்தவன். எனவே, சிரீலங்காமீது பல்லவரின் செல்வாக்கு வளர்ந்திருந்தது. பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்ட போது, அக்கபோதி பல்லவ மன்னருக்கு உறுதுணையாக இருந்தான். இவன் கி.பி. 724-இல் காலமானான்."}}