செம்மீன்
cemmīṉ
இது இந்தியா, மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடலிலும், வடக்கு, தெற்கு, அட்லாண்டிக் பெருங்கடலிலும், மொரீஷியஸ் தீவிலும் காணப்படும்.
இது இந்தியா, மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடலிலும், வடக்கு, தெற்கு, அட்லாண்டிக் பெருங்கடலிலும், மொரீஷியஸ் தீவிலும் காணப்படும். செம்மீனின் (Atherina brownii) வெள்ளி நிறக் கண்கள், கருவளையத்தைக் கொண்டுள்ளன. அகன்ற கொழுப்பு இமைகளும், கண்களுக்கு மேலாக அமைந்துள்ளன.
உடல் தடிமன், அதன் உயரத்தில் இரண்டிலொரு பங்காக உள்ளது. முனை மழுங்கிய நீள் மூக்கு, வாய்ப் பகுதியின் முன்பு காணப்படுகிறது. மேல் தாடை பக்கத் துடுப்பு வரை நீண்டுள்ளது. கீழ்த் தாடை குறுகியும் அழுத்தமாகவும் விளங்குகிறது.
மேல் தாடையில் வரிசையாக அமைந்துள்ள பற்கள் வலிமையாக உள்ளன. உட்குழிவுடைய கீழ்த் தாடை பஞ்சு நுனி போன்ற இழைகளைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பு, வால் துடுப்பின் அடிப் பகுதியிலிருந்து தோன்றுகிறது. பெரும் எண்ணிக்கையிலான நீட்சிகளுடைய உதிரும் செல்கள், மார்புத் துடுப்பின் அடியில் காணப்படுகின்றன. முன் பக்கத்திலுள்ள 12 செதில்கள் நடுக் குழாய் போன்று அமைந்துள்ளன.
செம்மீன்கள் பசுமை கலந்த வெள்ளி நிறத்திலும், வெள்ளி நிறப் புள்ளிகளுடைய தங்க நிறத்திலும் காணப்படும். ஒரு பெரிய கரும் புள்ளி தலையின் பின் பகுதியில் உள்ளது. ஓர் அகன்ற வெள்ளி நிறப் பட்டை வால் துடுப்பின் நடுவில் அமைந்துள்ளது. நுண்ணிய கரும் புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் நிறத் துடுப்புகளும், சில மீன்களில் காணப்படும். எட்டு அங்குலம் வரை வளரும் இயல்புடைய செம்மீன்கள் மலபார் தீவுகளில் பெருமளவில் உணவிற்காகப் பிடிக்கப் படுகின்றன.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 770)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqdv78vq/
தமிழ்“செம்மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qqdv78vq/APA
Oliyon Research. (2026). செம்மீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qqdv78vq/MLA
"செம்மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qqdv78vq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment