அண்டர், இராபர்ட்டு
aṇṭar, irāparṭṭu
அண்டர், இராபர்ட்டு என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர்.
அண்டர், இராபர்ட்டு என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 281)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qmb8ad7a/
தமிழ்“அண்டர், இராபர்ட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qmb8ad7a/APA
Oliyon Research. (2026). அண்டர், இராபர்ட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qmb8ad7a/MLA
"அண்டர், இராபர்ட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qmb8ad7a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment