அண்டர், இராபர்ட்டு என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர். ‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார்.