செயல் கூறு பணிமிகுப்பு

ceyal kūṟu paṇimikuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக் கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை, வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் செயல் கூறுகளின் வேறுபாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல் கூறினை தானாகவே அடையாளம் கண்டுகொள்ளும். (எ-டு) sin (float), sin (int) என்று இரண்டு செயல்கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக் கோணத்தையும் இன்னொன்று கோணமதிப்பையும் ஏற்கும். sin (3. 142) /2. 0) என்பது sin (π/2) என்பதால் 1. 0 என்ற விடை கிடைக்கும். sin (45) என்பது 0. 5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல்கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு. — function overloading
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 636)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfwn6tgz/

தமிழ்
“செயல் கூறு பணிமிகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfwn6tgz/
APA
Oliyon Research. (2026). செயல் கூறு பணிமிகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qfwn6tgz/
MLA
"செயல் கூறு பணிமிகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfwn6tgz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment