அச்சு இடையகம்
accu iṭaiyakam
பொருள்கள் · Senses
1.
ஒரு தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத்தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவலை, நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகிறது. இந்த நினைவகப் பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சிலவற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடுவதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene) யில் நிறுத்திவைத்துக் கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப்பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்
— print buffer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qazm2gbp/
தமிழ்“அச்சு இடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qazm2gbp/APA
Oliyon Research. (2026). அச்சு இடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qazm2gbp/MLA
"அச்சு இடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qazm2gbp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment