{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qazm2gbp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qazm2gbp/", "kind": "word", "headword": "அச்சு இடையகம்", "romanization": "accu iṭaiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.901159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத்தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவலை, நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகிறது. இந்த நினைவகப் பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சிலவற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடுவதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene) யில் நிறுத்திவைத்துக் கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப்பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்", "needs_definition": false, "gloss_en": "print buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அச்சு இடைநினைவகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1153"}]}}