ஆஸ்லோ
āslō
ஆஸ்லோ நார்வேயின் தலைநகரம்; புதுமுறையில் கட்டப்பெற்ற கடற்கரை நகரம்.
ஆஸ்லோ நார்வேயின் தலைநகரம்; புதுமுறையில் கட்டப்பெற்ற கடற்கரை நகரம். நார்வே நகரங்களில் மிகப் பெரியது. 1624-ல் IV-ம் கிறிஸ்டியன் என்னும் அரசனால் புதுப்பிக்கப்பட்டது. 1925 வரை கிறிஸ்டியானியா என்று வழங்கி வந்தது. இப்போது நார்வே மக்கள் தங்கள் மொழிச் சொல்லாகிய ஆஸ்லோ என்னும் பெயரை அதற்கிட்டு வழங்குகின்றனர். நார்வேயிலுள்ள பழைய பல்கலைக் கழகம் இங்குள்ளது ; அதற்குப் பிரெடரிஷானாப் பல்கலைக் கழகம் என்று பெயர். இந்நகரம் 1940-1945 வரை ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுதலையடைந்தது. மக்: 4,17,238 (1946). கே. ஆர்.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 543)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q7r8k6np/
தமிழ்“ஆஸ்லோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q7r8k6np/APA
Oliyon Research. (2026). ஆஸ்லோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q7r8k6np/MLA
"ஆஸ்லோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q7r8k6np/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment