{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q7r8k6np/", "data": {"id": "q7r8k6np", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q7r8k6np/", "kind": "article", "headword": "ஆஸ்லோ", "romanization": "āslō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.060692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆஸ்லோ நார்வேயின் தலைநகரம்; புதுமுறையில் கட்டப்பெற்ற கடற்கரை நகரம்.", "body_ta": "ஆஸ்லோ நார்வேயின் தலைநகரம்; புதுமுறையில் கட்டப்பெற்ற கடற்கரை நகரம். நார்வே நகரங்களில் மிகப் பெரியது. 1624-ல் IV-ம் கிறிஸ்டியன் என்னும் அரசனால் புதுப்பிக்கப்பட்டது. 1925 வரை கிறிஸ்டியானியா என்று வழங்கி வந்தது. இப்போது நார்வே மக்கள் தங்கள் மொழிச் சொல்லாகிய ஆஸ்லோ என்னும் பெயரை அதற்கிட்டு வழங்குகின்றனர். நார்வேயிலுள்ள பழைய பல்கலைக் கழகம் இங்குள்ளது ; அதற்குப் பிரெடரிஷானாப் பல்கலைக் கழகம் என்று பெயர். இந்நகரம் 1940-1945 வரை ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுதலையடைந்தது. மக்: 4,17,238 (1946). கே. ஆர்.]]"}}