அல்சியர்சு
alciyarcu
அல்சீரியாவின் தலைநகரும், மத்திய தரைக்கடலில் ஒரு துறைமுகமுமாகும்.
அல்சீரியாவின் தலைநகரும், மத்திய தரைக்கடலில் ஒரு துறைமுகமுமாகும். அல்சீரியாவின் மிகப் பெரும் நகரம் அல்சீயர்சுதான். இந்நகர் கி.பி. 900–ஆம் ஆண்டளவில் நிலைநாட்டப்பெற்றது. மூர் இனத்தவர்கள் பேரரசை நிலைநாட்டி இருந்த காலத்தில் இந்நகரமே அவர்களின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். அல்சீரசு வளைகுடாவை எதிர்நோக்கி மலைப்பாங்கான இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இன்றைய மாநகரம் மலைப்பிரிவின் தாழ்நிலப் பகுதியைப் பெரும்பாலும் கொண்டுள்ளது. மூர்கள் வாழ்ந்த பழம் பகுதியினைக் கசுபா (Kasba) என்பர். கசுபா என்பதற்குக் கோட்டை என்பது பொருள்; மலையுச்சியில் கட்டப்படுவது. மக்கள் குடியிருப்புகள் குறுகிய சந்துகளுக்கிடையே பெருகியுள்ளன. அல்சீயர்சு (Algiers) மாநகரின் மக்கள்தொகை 21,59,57 (1980).
அல்சியர்சு நகரம்
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 840)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6r9pqt9/
தமிழ்“அல்சியர்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q6r9pqt9/APA
Oliyon Research. (2026). அல்சியர்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q6r9pqt9/MLA
"அல்சியர்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q6r9pqt9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment