{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q6r9pqt9/", "data": {"id": "q6r9pqt9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q6r9pqt9/", "kind": "article", "headword": "அல்சியர்சு", "romanization": "alciyarcu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:38.990138+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அல்சீரியாவின் தலைநகரும், மத்திய தரைக்கடலில் ஒரு துறைமுகமுமாகும்.", "body_ta": "அல்சீரியாவின் தலைநகரும், மத்திய தரைக்கடலில் ஒரு துறைமுகமுமாகும். அல்சீரியாவின் மிகப் பெரும் நகரம் அல்சீயர்சுதான். இந்நகர் கி.பி. 900–ஆம் ஆண்டளவில் நிலைநாட்டப்பெற்றது. மூர் இனத்தவர்கள் பேரரசை நிலைநாட்டி இருந்த காலத்தில் இந்நகரமே அவர்களின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். அல்சீரசு வளைகுடாவை எதிர்நோக்கி மலைப்பாங்கான இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இன்றைய மாநகரம் மலைப்பிரிவின் தாழ்நிலப் பகுதியைப் பெரும்பாலும் கொண்டுள்ளது. மூர்கள் வாழ்ந்த பழம் பகுதியினைக் கசுபா (Kasba) என்பர். கசுபா என்பதற்குக் கோட்டை என்பது பொருள்; மலையுச்சியில் கட்டப்படுவது. மக்கள் குடியிருப்புகள் குறுகிய சந்துகளுக்கிடையே பெருகியுள்ளன. அல்சீயர்சு (Algiers) மாநகரின் மக்கள்தொகை 21,59,57 (1980).\n\nஅல்சியர்சு நகரம்"}}