அழகம்மை ஆசிரியவிருத்தம்
aḻakammai āciriyaviruttam
கவிமணி தேசிகவிநாயகம் பின்னையவர்களால் இயற்றப்பட்ட ஒரு சிற்றிலக்கியமாகும்.
கவிமணி தேசிகவிநாயகம் பின்னையவர்களால் இயற்றப்பட்ட ஒரு சிற்றிலக்கியமாகும். இந்நூல் 10 கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் கொண்டது; செய்யுள்கள் அனைத்தும் சந்தப்பாக்களாக அமைந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டச் சுசீந்திரத்திற்கு அருகிலுள்ள தேரூரில் கோயில் கொண்டிலங்கும் அழகம்மை மீது பாடப்பெற்றது இத்துதி நூலாகும். தேரூர் இதன்கண் இரதபுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தென்னிரத புரி வாழும் என்னரிய செல்வமே, தேவி அழகம்மை உமையே’ என்பதனை ஈற்றடி மகுடமாகக் கொண்டு இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. நூலின் தொடக்கத்தில் வெண்பாவிலமைந்த உதயமார்த்தாண்ட விநாயகர் துதி, நூலுக்குக் கடவுள் வாழ்த்தாக உள்ளது. தேரூர், பழனஞ் சூழ்ந்த மருத வளம் சான்று விளங்கும் தன்மையினைக் கவிமணி, ‘பொங்கிடும் குரவையிட்டு எங்குமோரொலி செய்து, பொலிவாக மள்ளரெல்லாம், சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற செய்யகம் குழுமுமூராம் தென்னிரத புரி’ என்று கவினுறக் காட்டியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 917)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5q4z8u8/
தமிழ்“அழகம்மை ஆசிரியவிருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q5q4z8u8/APA
Oliyon Research. (2026). அழகம்மை ஆசிரியவிருத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5q4z8u8/MLA
"அழகம்மை ஆசிரியவிருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q5q4z8u8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment