சிறுநீரகமும், உணர்வகற்றலும்
ciṟunīrakamum, uṇarvakaṟṟalum
நரம்புக் கட்டுப்பாடு, நாளமில் சுரப்பிக் கட்டுப்பாடு, உள்ளார்ந்த சுய கட்டுப்பாடு, குருதி இயக்க மாற்றங்கள், கொள்ளளவு நிலை, இதயத் தசைச் செயல்பாடு, குருதி ஓட்டப் பரிமாற்றம், ரெனின்—ஆன்ஜியோடென்சின் அல்டோஸ்டீரான் அமைப்பு, சிறுநீர்ப் பிரிவு எதிர் ஹார்மோன், புரோஸ்டோகிளாண்டின் ஆகிய அனைத்தும் சிறுநீரக மண்டலப் பணிகளாக உள்ளன. உணர்வகற்று மருந்துகளும் சிறுநீரகத்தின் மீது வினை புரிகின்றன.
உணர்வகற்று மருந்துகளால் (ஹாலோத்தேன், தயோபெண்டால், குராரே, நைட்ரஸ் ஆக்சைடு) சிறுநீரகத்திற்கான குருதி ஓட்டமும், சிறுநீரக முடிச்சுகளின் வடிகட்டு விகிதமும் பாதிக்கப்படுகின்றன. நாள உள் கொள்ளளவு குறைவதால், சிறுநீரகப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. உணர்வகற்றலின் தன்மையை எளிதில் அளவிட முடியாது.
மெத்தாக்சிபுளுரேன், என்புளுரேன், ஐசோபுளுரேன் ஆகியவை சிறுநீரகத்தின் பணிகளையும், சிறுநீரகக் குருதி ஒட்டத்தையும் பாதிக்கின்றன. நாட்பட்ட நோயாளிகள் அல்லது மிகவும் மெலிந்த நோயாளிகளைப் போல், சிறுநீரக முறிவு கொண்ட நோயாளி, மருந்துகளுக்கு மிகையாக மறு வினை புரிகிறார். ஆகவே, மயக்க மருந்து, துயிலூட்டி ஆகியவற்றைக் குறைந்த அலகிலேயே கொடுக்க வேண்டும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், (சிறுநீர் பிரிவது 0.5—1மி.லி./கி. கிராமுக்குக் குறைந்தால்) அதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து, ஆவன செய்து, சிறுநீரக நசிவைத் தடுக்க வேண்டும்.
நீர்மக் கொள்ளளவைப் பேணுதல், அறுவையின் போதான குருதி இழப்பை ஈடு செய்தல், நீர்த் தேக்கத்தைத் தவிர்த்தல் ஆகியவை மருத்துவத்தில் அடங்கும். ஆழ்ந்த உணர்வகற்றலையும், நீரிழப்பையும் தவிர்க்க வேண்டும். குருதி அழுத்தம், இதயக் குருதி வெளிப்பாடு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். சிறுநீரில் மையோகுளோபின், ஹீமோகுளோபின் வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மானிட்டாலைச் சிரை வழிச் செலுத்துதல் நல்லது.
சிறுநீரக முறிவு உள்ள நோயாளிக்கு உணர்வகற்றல் அளிக்கும் போது, சோகை, குருதி உறைவு. நுண்ணுயிர்ப் பாதிப்பு, இதயக் குருதி நாளச் சிக்கல், உடலின் நீர்ம நிலை, மின்பகுளிகளின் (electrolytes) அளவு, ஆக்கச் சிதை மாற்ற அமில நிலை, நரம்பு நோய் வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். இதய மின்னலை வரைவு, பொட்டாசியம், pH ஆகியவற்றை அடிக்கடி அளவிடலாம். மையச் சிரை அல்லது நுரையீரல் தமனி அழுத்தம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, உட்செலுத்தப்படும் நீர்மத்தை அளவிடலாம். இவற்றை நன்கறிந்த பின், உணர்வகற்று முறையை முடிவு செய்யலாம். —சாரதா கதிரேசன் நூலோதி. Michael T. Gillette, et.al., Clinical Anaesthesia, Second Edition, Little Brown and Co., Boston, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 374)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyqh9mq7/
தமிழ்“சிறுநீரகமும், உணர்வகற்றலும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pyqh9mq7/APA
Oliyon Research. (2026). சிறுநீரகமும், உணர்வகற்றலும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pyqh9mq7/MLA
"சிறுநீரகமும், உணர்வகற்றலும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pyqh9mq7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment