அரபத்த நாவலர்
arapatta nāvalar
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் தஞ்சை மாவட்ட அறந்தாங்கிக் கோட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேளாளர் குலத்தைச் சார்ந்த இவர் சைவ சமயத்தினராவார். தமிழில் பரத சாத்திரம் என்னும் இலக்கண நூலை இவர் இயற்றியுள்ளார். பரதம் என்னும் பெயர் பாவம், இராகம், தாளம் என்னும் மூன்று சொற்களினுடைய முதலெழுத்துக்களின் கூட்டாக வழங்கும் காரணப் பெயர் என்பது கூறப்படுகிறது. பரதர் இயற்றியது என்பதனால் இப்பெயர் அமைந்தது என்றும் கூறுவர். இந்நூல் நாட்டியத்தின் இயல்பினைக் கூறுகிறது. இது அகத்தியர் இயற்றிய மகாபாரதம் என்னும் நூலில் சுருக்கமாக அமைந்தது; பாயிரம், பாவவியல், இராகவியல், தாளவியல், ஒழிபியல் என ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. நூற்பாவாலமைந்த இந்நூல் நாட்டிய இயல்பினை விளக்க, இயல் இசைத் தமிழின் திறங்களை நன்கு விளக்கிக் கூறுகிறது. 32 இராகங்களுக்கு இந்நூல் இலக்கணம் இயம்புகிறது. அழகர் கலம்பகம் என்னும் நூலும் இவரால் பாடப் பெற்றது எனக் கூறப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 750)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxanz48a/
தமிழ்“அரபத்த நாவலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pxanz48a/APA
Oliyon Research. (2026). அரபத்த நாவலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pxanz48a/MLA
"அரபத்த நாவலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pxanz48a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment