இயல்பான பொருள்களின் நிலையையும், நேரஞ் சார்ந்த விசையையும் பற்றி விளக்கும் அறிவியலின் பிரிவுக்குச் செந்நிலை விசையியல் (classical mechanics) என்று பெயர். விசையியலின் பல விதிகள், ஆர்க்மிடிசிற்கு முன்பே ஏற்படுத்தப்பட்டன. 1638இல் கலிலியோ விசையியலின் முதன்மையான கருத்துகளை வரையறுத்தார். 1687இல் ஐசக் நியூட்டன் இயக்கவியலின் அடிப்படை விதிகள், ஈர்ப்பியல் விதி, கோள்களின் இயக்கம் ஆகியவற்றை வெளியிட்டார். 18ஆம் நூற்றாண்டில் டி அலெம்பெர்ட், லக்ரான்ஜி, லாப்லாஸ் ஆகியோரின் விசையியலின் சிறப்பு மிக்க கண்டுபிடிப்பு செந்நிலை விசையியல் ஆகும். இது நியூட்டோனியன் விசையியல் என்றும் குறிக்கப் படுகிறது. இது தற்கால விசையியலான புள்ளியியல், சார்பியல், குவாண்டமியல் போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. செந்நிலை விசையியலின் பொதுவான கருத்துகள் கணிதவியல் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. கணித தருக்க முறைப்படி, பொருளின் இயக்கம் கணக்கிடப்பட்டு, அது ஆய்வகக் கணக்கீட்டுடன் ஒப்புமைப் படுத்தப் படுகிறது. இது, இயற்கைப் பொதுக் கொள்கைகளை நன்கு விளக்குகிறது. புது இயற்பியலின் பல பிரிவுகளுக்கும், இது தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இதன் கணிதவியல் விளக்கம் தற்சார்பியல் கொள்கைக்கும், மற்ற ஆய்வுகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. செந்நிலை விசையியல் முறையே வளிம, நீர்ம, திண்மங்களின் இயக்கங்களை விளக்குகிறது. ஆனால், பொதுவாக, இது திண்மங்களின் இயக்கத்தையே தெளிவாக வரையறுக்கிறது. இது நிலையியல், இயங்கியல் மற்றும் இயக்கவியல் என்ற துணைப் பிரிவுகளைக் கொண்டது. தொடர்பு கொண்டுள்ளது. திண்ம இயற்பியலில் பல கோட்பாடுகளைச் செந்நிலை விசையியல் கொண்டே விளக்க வேண்டியுள்ளது. இந்தத் தொடர்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டவணையில் திண்மக் கோடுகள் (solid lines) அதன் கோட்பாட்டு இயற்பியலையும், புள்ளிகளால் இணைக்கும் கோடுகள் அதன் பிரிவுகளையும் குறிப்பிடும். நியூட்டோனியன் சமன்பாட்டை வடிவமைத்தல். ri, Pi = miri என்பன முறையே i-ஆவது துகளின் நிலை வெக்டர், நேர் கோட்டு உந்தம் ஆகும். ri என்பது துகளின் திசை வேகம் ஆகும். இந்த அமைப்பின் நியூட்டன் இயக்கச் சமன்பாட்டைப் பின்வருமாறு குறிப்பிடலாம். \frac{\mathrm{d}p_i}{\mathrm{d}t} = F_i^{(e)} + \sum_{j \ne i}F_{ji} \qquad \qquad \text { (1) } இங்கு F_i^{(e)} என்பது i ஆம் துகளின் மீது செயல் படும் வெளி விசை. Fij என்பது j ஆம் துகளுக்கும், i ஆம் துகளுக்கும் இடையே உள்ள இடை விசை ஆகும். துகளின் மீது செயல்படும் விசையின் தன்மையைப் பொறுத்து, நியூட்டன் இயக்க விதியிலிருந்து, பல்வேறு அழிவின்மை விதிகள் பெறப் படுகின்றன. (எ-டு. Fji = - Fij. அமைப்பின் மொத்த நேர் கோட்டு உந்தம் மாறா இயக்கமாக உள்ளது Fji = -Fij P = \sum_i P_i \qquad \qquad \qquad \qquad \text { (2) } என்பது ri-rj என்ற திசையில் இருக்கிறது. அதன் வெளி விசை மூலத்தில் (origin) சுழியாகிறது. கோண உந்தம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. L = \sum_i r_{i} \times P_i \qquad \qquad \text { (3) } இந்த அமைப்பின் நேரியல் திருப்பங்கள் சமச் சீர்மை பெற்றுள்ள போது, நேரியல் கோண அழிவின்மை பொருந்துகிறது. இதே போல், ஒரு புள்ளியைப் பொறுத்த கோண உந்த அழிவின்மை, அதே புள்ளியைச் சார்ந்த சமச் சீர்மைத் திருப்பங்களுக்குச் சமமாக இருக்கும். iஆம் துகளின் மீது செயல் படும் மொத்த விசைகளைக் கொண்டு, பிறிதொரு அழிவின்மைக் கோட்பாடு பெறப்படுகிறது. எதிர்ச் சரிவின் திசையிலி V அனைத்து ஆயங்களின் சார்பு ஆகும். அமைப்பின் மொத்த ஆற்றல் E = T + V \qquad \qquad \qquad \text { (4) } இங்கு T இயக்க ஆற்றல் ஆகும். T = \frac {1}{2} \sum m_i (\hat r)^2 \qquad \qquad \text { (5) } V நிலை ஆற்றல் ஆகும். இதிலிருந்து இயக்கத்தை வரையறுக்கும் லக்ரான்ஜின் சமன்பாடுகள் பெறப்படுகின்றன. காண்க: லக்ரான்ஜின் சமன்பாடுகள், இயக்கவியல் —பெ. துரைசாமி நூலோதி. S.L. Gupta, V.Kumar and H.V. Sharma, Classical Mechanics, Pragati Prakashman Publication, Meerut, 1982.