அலெக்சாந்திரியாவில் இருந்த தொன்மையான நூலகம். பண்டைக் காலத்தில் திரட்டப்பெற்ற சுருள் வடிவமான ஏடுகள் இந்நூலகத்தில் இருந்தன. இந்நூலகம் அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கியது. எகிப்தின் உரோமானிய அரசர்களான முதலாம் தாலமியும், இரண்டாம் தாலமியும் இந்நூலகத்தைக் கி.மு. 200-ஆம் ஆண்டு வளர்ச்சிபெறச் செய்தார்கள். இந்நூலகத்தில் ஏறத்தாழ 7,00,000 சுருள் வடிக ஏடுகள் இருந்தன. இந்நூலகத்தின் ஒரு பகுதி கி.மு. 47–இல் சூலியசு சீசர் முற்றுகையின் போதும், பின்னர் வந்த முற்றுகைகளின் போதும் அழிந்திருக்கக்கூடும்.