{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pdsamuy6/", "data": {"id": "pdsamuy6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pdsamuy6/", "kind": "article", "headword": "அலெக்சாந்திரிய நூலகம்", "romanization": "alekcāntiriya nūlakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.745367+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அலெக்சாந்திரியாவில் இருந்த தொன்மையான நூலகம்.", "body_ta": "அலெக்சாந்திரியாவில் இருந்த தொன்மையான நூலகம். பண்டைக் காலத்தில் திரட்டப்பெற்ற சுருள் வடிவமான ஏடுகள் இந்நூலகத்தில் இருந்தன. இந்நூலகம் அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கியது. எகிப்தின் உரோமானிய அரசர்களான முதலாம் தாலமியும், இரண்டாம் தாலமியும் இந்நூலகத்தைக் கி.மு. 200-ஆம் ஆண்டு வளர்ச்சிபெறச் செய்தார்கள். இந்நூலகத்தில் ஏறத்தாழ 7,00,000 சுருள் வடிக ஏடுகள் இருந்தன. இந்நூலகத்தின் ஒரு பகுதி கி.மு. 47–இல் சூலியசு சீசர் முற்றுகையின் போதும், பின்னர் வந்த முற்றுகைகளின் போதும் அழிந்திருக்கக்கூடும்."}}