அடர்சுபீல்டு
aṭarcupīlṭu
இங்கிலாந்தில் மேற்கு யார்க் சயர் (West york shire) மாநிலத்தில் கிர்கிலீசு (Kirklees) மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி.
இங்கிலாந்தில் மேற்கு யார்க் சயர் (West york shire) மாநிலத்தில் கிர்கிலீசு (Kirklees) மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. இது புகழ் மிக்க இலீடுசு (Leeds) நகரத்தின் தென் மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஒரு சிற்றுாராக இருந்த இப்பகுதி காலப்போக்கில் விரிவடைந்து நெசவாலைகள் மிக்க தொழில் நகரமாக மாறியது. இதன் அண்மையில் கால்டர் (Calder), மார்சுடென் (Marsden) கால்வாய்கள் வெட்டப்பட்டமையால் இந்நகரத்தின் வளம் மேலும் பெருகியது. இங்குப் பஞ்சாலைகள் மிகுதி, நிலக்கரியும் மிகுதியாகக் கிடைக்கிறது. இவற்றின் உதவியால் இரசாயனத் தொழில்கள், பொறியியல் தொழிற்சாலைகள் முதலியன தோன்றியுள்ளன. அடர்சுபீல்டின் (Huddersfield) மக்கள் தொகை 123,888 (1981),
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 238)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pa7uncfg/
தமிழ்“அடர்சுபீல்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pa7uncfg/APA
Oliyon Research. (2026). அடர்சுபீல்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pa7uncfg/MLA
"அடர்சுபீல்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pa7uncfg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment