மறைப்பு துண்மி

maṟaippu tuṇmi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அனைத்து 1-களையும் அப்படியே தக்க வைக்குமாறு செய்ய முடியும் அல்லது அனைத்து 1-களையும் 0ஆக மாற்றிவிடவும் முடியும். மறைப்பு மதிப்பில் இப்பணியைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட துண்மி, மறைப்புத் துண்மி எனப்படுகிறது. (எ-டு) : தரவு மதிப்பு 00001111 என்க. மறைப்பு எண் 11111111 என்க. இந்த இரண்டு எண்களையும் (உ-ம்) (AND) செய்வோம் எனில் விடை, 00001111 எனக் கிடைக்கும். இங்கே மறைப்பு எண்ணில் உள்ள கடைசி நான்கு துண்மி (bits) களும் மறைப்பு துண்மிகளாக செயல்படுகின்றன. இவை தரவு மதிப்பிலுள்ள நான்கு 1-களையும் மாற்றமின்றி அனுமதிக்க உதவுகின்றன — mask bit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 906)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9n3yajy/

தமிழ்
“மறைப்பு துண்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9n3yajy/
APA
Oliyon Research. (2026). மறைப்பு துண்மி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p9n3yajy/
MLA
"மறைப்பு துண்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9n3yajy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment