{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p9n3yajy/", "data": {"id": "p9n3yajy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p9n3yajy/", "kind": "word", "headword": "மறைப்பு துண்மி", "romanization": "maṟaippu tuṇmi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:57.396256+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அனைத்து 1-களையும் அப்படியே தக்க வைக்குமாறு செய்ய முடியும் அல்லது அனைத்து 1-களையும் 0ஆக மாற்றிவிடவும் முடியும். மறைப்பு மதிப்பில் இப்பணியைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட துண்மி, மறைப்புத் துண்மி எனப்படுகிறது. (எ-டு) : தரவு மதிப்பு 00001111 என்க. மறைப்பு எண் 11111111 என்க. இந்த இரண்டு எண்களையும் (உ-ம்) (AND) செய்வோம் எனில் விடை, 00001111 எனக் கிடைக்கும். இங்கே மறைப்பு எண்ணில் உள்ள கடைசி நான்கு துண்மி (bits) களும் மறைப்பு துண்மிகளாக செயல்படுகின்றன. இவை தரவு மதிப்பிலுள்ள நான்கு 1-களையும் மாற்றமின்றி அனுமதிக்க உதவுகின்றன", "needs_definition": false, "gloss_en": "mask bit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 906"}]}}