பென்சீன் டைஅசோனியம் குளோரைடு என்ற வேதிப் பொருளிலிருந்து பல்வேறு அரோமாட்டிக் சேர்மங்களைத் தயாரிக்கலாம். அச்சேர்மத்தின் பல வினைகளில் முக்கியமானதொரு வினையே சான்ட்மேயர் வினை (Sandmeyer reaction) ஆகும். அரோமாட்டிக் கரு-ஹாலோஜன் சேர்மங்களைத் தயாரிக்க இவ்வினை புதிய எளிய வழியாகும். அயோடோபென்சீனைத் தயாரிக்க இவ்வினை பெரிதும் பயன்படவில்லை என்றாலும், குளோரோபென்சீன், புரோமோபென்சீன் ஆகியவற்றைத் தயாரிக்க இது மிகவும் பயன்படுகிறது. 1884 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இவ்வினையின் வினைப்படு பொருள் பென்சீன் டைஅசோனியம் குளோரைடு ஆகும். வினைக் கலம் ஒன்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட குப்பரஸ் குளோரைடு கரைசலில், பென்சீன் டைஅசோனியம் குளோரைடு கரைசலை மெதுவாகச் சேர்த்தால், டைஅசோனியம் தொகுதி குளோரின் அணுவால் பதிலீடு செய்யப்பட்டு, குளோரோபென்சீன் விளை- பொருளாகக் கிடைக்கும். நைட்ரஜன் வளிமம் உடன் விளைபொருளாக வெளியேறும். ஹைட்ரோகுளோரிக் அமிலத்திற்குப் பதிலாக ஹைட்ரோபுரோமிக் அமிலத்தையும், குப்ரஸ் குளோரைடுக்குப் பதிலாக, குப்பரஸ் புரோமைடையும் பயன்படுத்தினால் விளைபொருளாக, புரோமோ பென்சீன் கிடைக்கும். அயோடோபென்சீனை இம்முறையில் தயாரிப்பதில்லை. ஏனெனில் குளோரோ பென்சீனுடன், பொட்டாசியம் அயோடைடு கரைசலைச் சேர்த்தாலே, அயோடோபென்சீன் கிடைத்து விடும். இவ்வினையின் வழிமுறை தெளிவாக அறியப்படவில்லை; எனினும், பின் வரும் வழிமுறையில் வினை நடைபெறுவதாகக் கொள்ளலாம். கௌட்ரியின் ஆய்வுப்படி, இவ்வினையில் குப்ரஸ் குளோரைடு CuCl— அயனியாகப் பங்கேற்கிறது. குப்ரஸ் குளோரைடு, அமிலத்தில் இருந்து பெறப்பட்ட குளோரைடு எதிரயனியுடன் இணைந்து CuCl- என்ற எதிரயனியைத் தருகிறது. இவ்வயனி பென்சீன் டைஅசோனியம் அயனியுடன் மெதுவாக வினைப்படுகிறது. இந்நிலையே, வினையின் முக்கியமான நிலையும், வினை வேகத்தை அறுதியிடும் நிலையுமாகும். இதனால், பென்சீன் இயங்கு உறுப்பு (free radical) உண்டாகிறது. இது விரைந்து CuCl வினைப்பட்டு, குளோரோபென்சீனைத் தருகிறது. குப்ரஸ் குளோரைடு மீண்டும் உடன் விளைபொருளாகத் தோன்றுகிறது. m-குளோரோ அனிலின் போன்ற நேரடியாக எளிதில் தயாரிக்க இயலாத சேர்மத்தை இவ்வினையைப் பயன்படுத்தித் தயாரிக்கலாம். டைநைட்ரோ பென்சீனை, சோடியம் சல்ஃபைடு கொண்டு பகுதி ஒடுக்கம் செய்து, 11-நைட்ரோ அனிலீனைத் தயார் செய்யலாம். இதை டைஅசோ ஆக்கல் வினைக்கு உட்படுத்திய பின்பு சான்ட் மேயர் வினைக்கு உட்படுத்தினால், m-குளோரோநைட்ரோ பென்சீன் கிடைக்கும். இதை ஒடுக்கி m-குளோரோ அனிலீனைத் தயாரிக்கலாம். —பி. ஈ. எம். லியாகத் அலிகான் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு முடிவுற்றது. இங்கு புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->