இராமலிங்கத் தம்பிரான்
irāmaliṅkat tampirāṉ
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் என்று சிறப்பாக அழைக்கப்பட்டார். இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். திருவாவடுதுறை ஆதீனத்தின் 16–ஆம் தலைவராக விளங்கிய மேலகரம் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் இவருக்குச் சிவதீட்சை அளித்தார். இவர் தம்மைப் பகைத்தவர் மேல் விரைந்து பாடும் திறம்பெற்றிருந்தார். இதனால் திருவாவடுதுறை மடத்திலிருந்த பலர் இவரை வெறுத்தனர். எனினும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராசச் செட்டியார் ஆகியோர் அன்பினால் மடத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் பல வசைகவிகளும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 134)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzwdcuwg/
தமிழ்“இராமலிங்கத் தம்பிரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nzwdcuwg/APA
Oliyon Research. (2026). இராமலிங்கத் தம்பிரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nzwdcuwg/MLA
"இராமலிங்கத் தம்பிரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nzwdcuwg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment