செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். இவரைப் பாவாடை வாத்தியார் என்றும் கூறுவர். இவர் ஆசிரிய நிகண்டு என ஒரு நூலும், உரையறி நன்னூல் என ஒரு நூலும், நன்னூற்கு ஆசிரியப் பாவால் அமைந்த ஓருரையும் இயற்றியுள்ளனர்.