சாய் சதுரம்
cāy caturam
நான்கு கோடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாற்கோட்டத்தில் (quadrilateral) நான்கு பக்கங்களும் சமமாகவும், இணையாகவும் இருந்து நான்கு கோணங் களும் சமமாக, ஒவ்வொன்றும் 90° இருப்பின், அது சதுரம் எனப்படும்.
நான்கு கோடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாற்கோட்டத்தில் (quadrilateral) நான்கு பக்கங்களும் சமமாகவும், இணையாகவும் இருந்து நான்கு கோணங் களும் சமமாக, ஒவ்வொன்றும் 90° இருப்பின், அது சதுரம் எனப்படும். நான்கு பக்கங்கள் மட்டும் சமமாக இருக்கும் நாற்கோட்டம், சாய்சதுரம் (rhombus) எனப்படும். இது இணைகரத்தின் ஒரு வகையாகும். மூலை விட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டிக் கொள்ளும். ஒரு பக்கத்தையும் உயரத்தையும் பெருக்கினால் கிடைக்கும் தொகை சாய்சதுரத்தின் பரப்பிற்குச் சமமாகும். மூலை விட்டங்களின் பெருக்குத் தொகையில் பாதியும் இதன் பரப்பிற்குச் சமமாகும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 61)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nsg5ym9p/
தமிழ்“சாய் சதுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nsg5ym9p/APA
Oliyon Research. (2026). சாய் சதுரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nsg5ym9p/MLA
"சாய் சதுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nsg5ym9p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment