ஒரு வகை மெல்லிய சல்லாத் துணி (fine muslin) சுவிஸ் மல் துணி (Swiss mull) எனப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் (இங்கிலாந்து நெசவுத் தொழில் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே) முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட சல்லாத் துணி இப்பெயரால் குறிப்பிடப்படுகிறது. புத்தக வடிவில் மடித்து விற்கப்படும் சல்லாத் துணி (book muslin) ஒரே வண்ணத்திலும், பல வண்ணக் கோலங்களிலும் திரைச் சீலைகள் தயாரிப்பதற்குப் பயனாகிறது. சுவிஸ் மல் துணி கஞ்சியிடப்பட்டுத் தற்காலிகமாக விறைப்பூட்டப்படுகிறது. —மேரா. பாலசுப்பிரமணியன்