சாந்தமான கழலையங்கள்
cāntamāṉa kaḻalaiyaṅkaḷ
ஒரு கழலையம் தீதற்ற சாந்தமான கழலையமா (benign tumour) அல்லது புற்றுப் பழங்கண் கழலையமா என்று நோய்க் குறிகளைக் கொண்டு ஆய்வது இன்றியமையாதது.
ஒரு கழலையம் தீதற்ற சாந்தமான கழலையமா (benign tumour) அல்லது புற்றுப் பழங்கண் கழலையமா என்று நோய்க் குறிகளைக் கொண்டு ஆய்வது இன்றியமையாதது. பல சமயங்களில் எளிதாகக் கண்டு பிடிக்க இயலும் இக்கட்டிகள் சில சமயங்களில், நோய்க்குறியில் மருத்துவரையும் குழப்பி விடும் தன்மை கொண்டவை.
சாந்தக் கழலையங்கள் பொதுவாக உறையுடன் காணப்படும். இது அடுத்துப் பரவுவதும் இல்லை. உறையுடன் நீக்க மீண்டும் வளர்வதும் இல்லை. இக்கட்டிகளின் வளர்ச்சி மெதுவாக, ஒரே நிலையில் கட்டி முழுதும் காணப்படும். இக்கழலையங்களின் அளவு, பாதிக்கப்பட்ட இடம், அழுத்தம் இவற்றைப் பொறுத்து, நோய்க்குறிகள் வேறுபடும். அரிதாக அடினோமா போன்ற சுரப்புகள் உடலில் மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம். பல சமயங்களில் இச்சாந்தக் கழலையங்கள் எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்படும். எ.கா: கொழுப்புக் கழலையம், நரம்பு நாரோமா முதலியன.
மருத்துவம். அறுவை மூலம் உறையுடன் களையும் போது குணமடையும்.
—மா.ஜெ. ஃபிரடெரிக் ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 50)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqpec97w/
தமிழ்“சாந்தமான கழலையங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nqpec97w/APA
Oliyon Research. (2026). சாந்தமான கழலையங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nqpec97w/MLA
"சாந்தமான கழலையங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nqpec97w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment