சாம்பல் நிறப்பொருள்
cāmpal niṟapporuḷ
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள ஒரு கரும் பொருள் வெளியிடுகிற பல்வேறு அலை நீளமுள்ள கதிர்களைப் போலவே, அவற்றுக்குக் குறிப்பிட்ட விகிதத்தில் கதிர்களை வெளியிடுகிற அதே வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருள் சாம்பல் நிறப் பொருள் (grey body) எனப்படும்.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள ஒரு கரும் பொருள் வெளியிடுகிற பல்வேறு அலை நீளமுள்ள கதிர்களைப் போலவே, அவற்றுக்குக் குறிப்பிட்ட விகிதத்தில் கதிர்களை வெளியிடுகிற அதே வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருள் சாம்பல் நிறப் பொருள் (grey body) எனப்படும். அதன் கதிர்களின் ஆற்றல் பரவீடும், கரும் பொருள் கதிர் வீச்சின் ஆற்றல் பரவீட்டைப் போன்றதாகவே இருக்கும். ஒவ்வோர் அலை நீளத்திலும், கரும்பொருள் கதிர் வீச்சுச் செறிவுக்கும், சாம்பற் பொருள் கதிர் வீச்சுச் செறிவுக்கும் இடையில் உள்ள தகவு ஒரே அளவாக இருக்கிறது.
சாம்பல் நிறம் என்பது பொருளின் நிறத்தைக் குறிப்பது அன்று, அப்பொருளின் கதிர் வீச்சுப் பரவீடு, கரும்பொருளின் கதிர் வீச்சுப் பரவீட்டை ஒத்திருப்பதாலும், அது கரும்பொருள் கதிர் வீச்சுப் பரவீட்டை விடக் குறிப்பிட்ட அளவு குறைந்திருப்பதாலும், அத்தகைய பொருள்கள் சாம்பல் நிறப் பொருள்கள் எனப்படுகின்றன.
பெரும்பாலான உலோகங்களுக்கு நிற மாலையின் கண்ணுக்குத் தெரியும் பகுதிக்குள் கதிர் வீச்சு எண் (emissivity) மாறிலியாக இருக்கும். எனவே அவை அப்பகுதியில் சாம்பல் நிறப் பொருள்கள் ஆகும். சாம்பல் நிறப் பொருள் என்ற கருத்து சில குறிப்பிட்ட பொருள்களின் மொத்தக் கதிர் வீசலின் செறிவைக் கணக்கிட உதவுகிறது. ஸ்டீபான்—போல்ட்ஸ்மான் விதியின் மூலம் கிடைக்கிற, கதிர் வீசலின் மொத்த ஆற்றலைக் கதிர் வீசு எண்ணால் பெருக்கினால், மொத்தக் கதிர் வீசல் செறிவு கிடைக்கிறது.
ஒரு பரப்பு வெளியிடும் கதிர் வீச்சின் ஆற்றல் பரவீட்டை ஒத்த அல்லது ஏறத்தாழ ஒத்திருக்கிற கதிர் வீசும் ஆற்றல் பரவீட்டை உடைய ஒரு கரும் பொருளின் வெப்ப நிலை, அப்பரப்பின் நிற வெப்ப நிலை (colour temperature) எனப்படும். ஒரு சாம்பல் நிறப் பொருளுக்கு, நிற மாலை முழுதும் கதிர் வீசு எண் மாறிலியாக இருப்பதால், அதன் பரப்பின் நிற வெப்ப நிலையும், உண்மையான வெப்ப நிலையும் ஒன்றாகவே இருக்கும். சாம்பல் நிறப் பொருள் என்ற கருத்து, பொருள்களின் நிற வெப்ப நிலையை அளவிட்டு, உண்மையான வெப்ப நிலையைக் கணக்கிட உதவுகிறது. —கே. என். ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 58)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqd3dgsg/
தமிழ்“சாம்பல் நிறப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nqd3dgsg/APA
Oliyon Research. (2026). சாம்பல் நிறப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nqd3dgsg/MLA
"சாம்பல் நிறப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nqd3dgsg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment