சாளை
cāḷai
குளூப்பியிடே குடும்பத்தைச் சார்ந்த சார்டின் மீன்களே சாளை எனவும் கூறப்படும்.
குளூப்பியிடே குடும்பத்தைச் சார்ந்த சார்டின் மீன்களே சாளை எனவும் கூறப்படும். பொதுவாக, இக்குடும்பத்திலுள்ள பல மீன் வகைகளுக்கும் இப்பெயர் பொருந்தும் என்றாலும், சிறப்பாகப் பசிஃபிக், ஆஃப்ரிக்கா, ஐரோப்பா மீன்களுக்கே பொருந்தும். முதன்முதலில், மத்திய தரைக்கடல் இத்தாலியத் தீவிலுள்ள சார்டினியா அருகில் இவ்வகை மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டமையால், சார்டின் எனப் பெயர் பெற்றன.
ஹெர்ரிங் வகையைச் சேர்ந்த இம்மீன்கள், உலகில் அனைத்துப் பகுதிகளிலும் மித வெப்பக் கடலோரங்களில் காணப்படுகின்றன. ஜப்பான், வடமேற்கு ஆஃப்ரிக்கா, தென் ஆஃப்ரிக்கப் பகுதிகளில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றின் நீளம் 23—30 செ.மீ. எடை 110—120 கிராம், முதுகுப் பகுதி நீலப் பழுப்பாகவும், வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். வளர்ந்த மீன்கள் 1000—1500 கொண்ட குழுவாகவே நீந்தும். இவை நீர்ப் பரப்பில் வாழும் மிதவையுயிரிகளை உண்டு வாழ்கின்றன.
பெரும்பாலும் இரவில் இவை கூட்டங் கூட்டமாக நீந்தும் போது, நீர்ப் பரப்பிலுள்ள ஒளியுமிழும் ஒற்றைச் செல் உயிரிகள் அலைக்கப்பட்டு ஒளியுண்டாகும். அமாவாசை இருட்டுக் காலங்களில் இவ்வொளி மிகுதியாகத் தெரிவதால், சாளை உள்ள இடத்தை எளிதில் தெரிந்து கொண்டு, வலை வீசிப் பிடித்து விடுவர். இம்மீன்களைப் பிடிக்க, பை வளையைப் (purse seine) பயன்படுத்துவர்.
சாளைகளைப் பதப்படுத்தி, டப்பாக்களில் அடைத்துப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சார்டின் எண்ணெய், லினோலியம், வண்ணப் பூச்சு (paint), குழைவணம் (varnish) போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. சில மீன்களைக் கோழித் தீவனங்களில் மீன் உணவாகவும், உரங்கள் தயாரிப்பதிலும் பயன்படுத்துகின்றனர். சிறு சாளைகள் தூண்டில் உணவாகவும் பயன்படுகின்றன. —கே. கே. அருணாசலம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 173)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkr59unz/
தமிழ்“சாளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nkr59unz/APA
Oliyon Research. (2026). சாளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nkr59unz/MLA
"சாளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nkr59unz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment